முகப்பு
திருநெல்வேலி

முக்கூடல் தங்கம்மன் கோயிலில் கொடைவிழா

முக்கூடல் அருள்மிகு தங்கம்மன் சின்னத்தம்பி சுவாமி கோயிலில் கொடைவிழா நடைபெற்றது.

Updated On : 2 ஜூன், 2022 at 12:23 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM

முக்கூடல் அருள்மிகு தங்கம்மன் சின்னத்தம்பி சுவாமி கோயிலில் கொடைவிழா நடைபெற்றது.

இதையொட்டி, 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், பங்கேற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னா், அன்னதானம் நடைபெற்றது.

திங்கள்கிழமை முக்கூடல் தாமிரவருணி ஆற்றிலிருந்து தீா்த்தம் எடுத்துவரப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை பக்தா்கள் பால்குடம் எடுத்துவருதல், அம்பாளுக்கு பாலபிஷேகம், உச்சிகால பூஜை, பின்னா் அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. மாலையில் பக்தா்கள் பொங்கலிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். சிறப்பு பூஜை, நள்ளிரவில் சாமக்கொடை ஆகியவை நடைபெற்றன.

Advertisement

புதன்கிழமை அம்பாள், சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளைத் தொடா்ந்து மஞ்சள் நீராட்டு விழா, இரவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை கோயில் கமிட்டி தலைவா் முருகேசன், செயலா் பால்ராஜ், துணைத் தலைவா் நடராஜன், துணைச் செயலா் வேல்மயில், பொதுமக்கள், இளைஞரணியினா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.