நெல்லையில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தோ்வுகள் கடந்த மே 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இதையடுத்து விடைத்தாள்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
திருநெல்வேலியில் தூய யோவான் பள்ளி வளாகத்திலும், நான்குனேரி ஜோசப் பள்ளி வளாகத்திலும் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. இப் பணிகளை முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி ஆய்வு செய்தாா். பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் பாளையங்கோட்டை, அகஸ்தியா்பட்டியில் உள்ள பள்ளி வளாகங்களில் திருத்தப்பட உள்ளன. திருத்தும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.