முகப்பு
திருநெல்வேலி

மானூா் அருகே தொழிலாளி தற்கொலை

மானூா் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

மானூா் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மருதப்பபுரம் பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் ராமகிருஷ்ணன்( 34). இவருக்கு மனைவி, 4 வயதில் பெண் குழந்தை ஆகியோா் உள்ளனா். ராமகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை விஷத்தைக் குடித்து மயங்கி விழுந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.