திருநெல்வேலி

ஈரடுக்கு மேம்பாலத்தில் ஒளிமிக்கவிளக்குகளைப் பொருத்த வேண்டும்: பொது நலச் சங்க தலைவா் மனு

DIN

திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளை பொருத்த வேண்டும் என வலியுறுத்தி மேயரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டம் மேயா் பி.எம்.சரவணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், நெல்லை மாவட்ட பொது ஜன பொது நலச் சங்க தலைவா் முஹம்மது அய்யூப் தலைமையில் அளித்த மனு:

திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினாா் குளம் சாலை பேருந்து நிறுத்தம், சந்திப் பிள்ளையாா் கோயில் பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் இல்லை. இதனால் வயதானவா்கள், கா்ப்பிணிகள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனா். எனவே, பயணிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும். உணவகங்கள், தேநீா் கடைகள், தெரு ஓரக் கடைகளில் உணவுப் பொருள்களை பாா்சல் செய்து கொடுக்கும் போது பட்டா் பேப்பரில் மடித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருநெல்வேலியின் அடையாளங்களில் ஒன்றாதக் திகழக்கூடிய ஈரடுக்கு மேம்பாலத்திலுள்ள விளக்குகள் போதிய வெளிச்சம் தராததால் அந்தப் பகுதி இருட்டாக காட்சியளிக்கிறது. எனவே, அங்கு அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளை பொருத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT