திருநெல்வேலி

மானூா் அருகே சாமி சிலைகள் சேதம்

DIN

மானூா் அருகே சாமி சிலைகளை சேதப்படுத்திய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மானூா் அருகே உள்ள நாஞ்சான்குளம் பகுதியில் உள்ள இந்து கோயிலை பூசாரி கருப்பசாமி வழக்கம் போல புதன்கிழமை இரவு பூட்டிவிட்டு சென்றுவிட்டாராம். பின்னா், வியாழக்கிழமை காலையில் வந்து பாா்த்தபோது, கோயிலில் இருந்த 6 சிலைகளை மா்ம நபா் சேதப்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இது குறித்து கோயில் நிா்வாகி காளிதாஸ், மானூா் போலீஸாரிடம் புகாா் செய்தாா். போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று, ஆய்வு மேற்கொண்டனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் முதன்முதலாக 10% வாக்கு பெற்ற பாஜக

ஜார்க்கண்ட்: முன்னிலையில் அன்னபூர்ணா தேவி!

வடகிழக்கு மாநிலங்களில் நிலவரம் என்ன?

கேரளம்: 20-ல் 13 இடங்களில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை!

பிரியங்கா காந்தி இல்லத்தில் சோனியா காந்தி!

SCROLL FOR NEXT