திருநெல்வேலி

கங்கைகொண்டான், ரஸ்தா சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான், ரஸ்தா சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை(ஜூன் 18) மின் விநியோகம் இருக்காது.

DIN

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான், ரஸ்தா சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை(ஜூன் 18) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கங்கைகொண்டான் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூா், ராஜபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, ஆளவந்தான்குளம், செழியநல்லூா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

இதே போல், ரஸ்தா துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் அன்று, பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மதவக்குறிச்சி, துலுக்கா்பட்டி, ரஸ்தா, பட்டவா்த்தி, வெங்கலப் பொட்டல், சேதுராயன்புதூா், கம்மாளன்குளம், காவலா் குடியிருப்பு சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT