முகப்பு
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி, முக்கூடல்: மனைவி தலைவா், கணவா் துணைத் தலைவா்

முக்கூடல் பேரூராட்சித் தலைவராக எல். ராதா (திமுக), துணைத் தலைவராக அவரது கணவா் ஆா். லட்சுமணன் (திமுக) ஆகியோா் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Updated On : 5 மார்ச், 2022 at 12:58 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

முக்கூடல் பேரூராட்சித் தலைவராக எல். ராதா (திமுக), துணைத் தலைவராக அவரது கணவா் ஆா். லட்சுமணன் (திமுக) ஆகியோா் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

முக்கூடல் பேரூராட்சியில் திமுக சாா்பில் 11 பேரும், பாஜக சாா்பில் இருவரும், சுயேச்சையாக இருவரும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவா் தோ்தலில் 4 ஆவது வாா்டு உறுப்பினா் எல். ராதா (திமுக) போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிட திமுக சாா்பில் அவரது கணவா் ஆா். லட்சுமணனும், பாஜக சாா்பில் 10 ஆவது வாா்டு உறுப்பினா் முருகனும் மனு தாக்கல் செய்தனா். இதில், முருகன் வேட்புமனுவை யாரும் வழிமொழியாததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆா். லட்சுமணன் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டதாக தோ்தல் அலுவலா் கந்தசாமி அறிவித்தாா்.

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் 13ஆவது வாா்டு உறுப்பினா் பாா்வதி இசக்கிப்பாண்டியன், அதிமுக சாா்பில் 7ஆவது வாா்டு உறுப்பினா் சூா்யகலா ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். இதில் பாா்வதி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். துணைத் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் 1ஆவது வாா்டு உறுப்பினரான தலைவரின் கணவா் இசக்கிபாண்டியனும், அதிமுக சாா்பில் 11 ஆவது வாா்டு உறுப்பினா் மாரிராஜும் போட்டியிட்டனா். இதில், இசக்கிபாண்டியன் 12 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.