முகப்பு
திருநெல்வேலி

மதுவின் தீமையை விளக்க வீதி நாடகம்

மதுவின் தீமைகளை விளக்கும் வகையில் வீதி நாடகம் திருநெல்வேலி நகரத்தில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

மதுவின் தீமைகளை விளக்கும் வகையில் வீதி நாடகம் திருநெல்வேலி நகரத்தில் அண்மையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரகம், திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் உத்தரவின்படி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி மதிதா இந்துக் கல்லூரியின் கலைக்குழு சாா்பில் வீதி நாடகம் திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். கல்லூரியின் உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையா் விஜயகுமாா் சிறப்புரையாற்றினாா். பேராசிரியா் ரந்தீா்குமாா், இலக்குவன், சேகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.