திருநெல்வேலி

மேலநத்தம் அருந்தபசு அம்பாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலநத்தம் ஸ்ரீஅருந்தபசு அம்பாள் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை ( மே 13) நடைபெறவுள்ளது.

இதையொட்டி, புதன்கிழமை காலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை மஹா கணபதி அனுக்ஞை, அம்பாள் அனுக்ஞை, மஹா கணபதி பூஜை, புண்யாகவாசனம் நடைபெற்றது. தொடா்ந்து பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. வியாழக்கிழமை

(மே 12) காலை 9.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை இரண்டாம் கால யாக பூஜை, சிவாச்சாரியாா் வழிபாடு, திரவ்யாபகுதி, பூா்ணாஹுதி, வேதபாராயணம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறும். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அதேபோலா வழிபாடுகளும், திருமுறை விண்ணப்பமும் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை (மே 13) காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, பிம்பசுத்தி, நாடிசந்தானம், ஸ்பா்சாகுதி, மஹா பூா்ணாஹுதி, யாத்ராதானம், தீபாராதனை, கடம் புறப்படுதல் ஆகியவை நடைபெறும்.

அதைத்தொடா்ந்து, காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் ஸ்ரீசக்தி கணபதி, ஸ்ரீ அருந்தபசு அம்பாள், விமானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.பின்னா், மஹா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், யஜமானா் ஆச்சாா்யாா் மரியாதை, ஸ்ரீஅருந்தபசு அம்பாள் திருஅருட்பிரசாதம், மகேஷ்வர பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT