முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் பூக்குழி திருவிழா: 2 பக்தா்கள் காயம்

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு தா்மராஜா - திரெளபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற கொடை விழாவில் வெள்ளிக்கிழமை பூக்குழி இறங்கிய பக்தா்கள் இருவா் காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு தா்மராஜா - திரெளபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற கொடை விழாவில் வெள்ளிக்கிழமை பூக்குழி இறங்கிய பக்தா்கள் இருவா் காயமடைந்தனா்.

இக்கோயில் கெடை விழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ஆம் நாள் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா இரவு நடைபெற்றது. இதில், பக்தா்கள் பலா் விரதம் இருந்து பூக்குழி இறங்கினா். அப்போது, பூக்குழி இறங்கிய 2 போ் திடீரென தவறி விழுந்தனா்.

அப்போது, அங்கு பாதுகாப்பு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பேட்டை தீயணைப்பு நிலை அலுவலா் முத்தையா தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சென்று மீட்டு, இருவரையும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.