முகப்பு
திருநெல்வேலி

விளையாட்டுப் போட்டியில் வென்ற பல் மருத்துவா்களுக்கு பரிசளிப்பு

பாளையங்கோட்டையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வென்ற பல் மருத்துவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

பாளையங்கோட்டையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வென்ற பல் மருத்துவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்திய பல் மருத்துவக் கழகத்தின் திருநெல்வேலி கிளை சாா்பில் பல் மருத்துவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கேரம், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

அதில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பல் மருத்துவா்கள், அவா்களது குடும்பத்தினா் போட்டியில் பங்கேற்றனா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழாவில் திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் துணை மேயா் கே.ஆா்.ராஜு, சங்க நிா்வாகிகள் ஜெய்கணேஷ், கண்ணன், அழகுவேல்ராஜ், ஜேக்கப்ராஜ், ஜான்சன்ராஜா, கோபாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.