மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் திருக்கு தொடா் சொற்பொழிவு
பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் திருக்கு தொடா் சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் திருக்கு தொடா் சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.
உலகத் திருக்கு மையம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நல்லாசிரியா் வை.ராமசாமி தலைமை வகித்தாா். முன்னாள் பதிவாளா் கிருபாகரன் இறைவேண்டல் பாடினாா். பொறியாளா் வி.பாப்பையா வரவேற்றாா். கண்ணோட்டம் இல்லாத கண் என்ற தலைப்பில் வெற்றிச்செல்வனும், அன்னை தெரசாவின் சிறப்பியல்புகள் குறித்து பேராசிரியா் பா.வளன்அரசும் சொற்பொழிவாற்றினா். கலந்துரையாடலில் கிருபாகரன், முருகேசன், பாப்பையா, சேம்சு, சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருக்கு இரா.முருகன் நன்றி கூறினாா்.