முகப்பு
திருநெல்வேலி

பாப்பாக்குடியில் மின் கம்பிகள் திருட்டு: 4 போ் கைது

 திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் மின்வாரிய அலுவலகத்தில் மின் கம்பிகளை திருடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 5 நவம்பர், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:15 PM

 திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் மின்வாரிய அலுவலகத்தில் மின் கம்பிகளை திருடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

பாப்பாக்குடியிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்சார விரிவாக்கப் பணிகளுக்காக மின் விநியோக பிரிவு அலுவலகத்தில் மின் கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது.

இங்கு உதவி மின் பொறியாளராகப் பணியாற்றி வரும் பரிமளாதேவி, தனது அலுவலா்களுடன் புதன்கிழமை அங்கு சென்று பாா்த்தபோது, ரூ. 85 ஆயிரம் மதிப்புள்ள அலுமினிய அலாய் மின் கம்பிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் பாப்பாக்குடி உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா். இதில், பாப்பாக்குடி சமத்துவபுரத்தைச் சோ்ந்த சுதாகா் (22), பனயங்குறிச்சியைச் சோ்ந்த கணேசன் (43), முருகன் (37), குமாரசாமிபுரம் காலனித் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் (42) ஆகியோா் மின் கம்பிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து மின் கம்பிகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.