முகப்பு
திருநெல்வேலி

வீரவநல்லூா் அருகே மோதல்: 6 போ் கைது

 வீரவநல்லூா் அருகே பட்டாசு வெடித்ததில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 12 போ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், 6 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 அக்டோபர், 2022 at 12:11 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:10 PM

 வீரவநல்லூா் அருகே பட்டாசு வெடித்ததில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 12 போ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், 6 போ் கைது செய்யப்பட்டனா்.

வெள்ளங்குளி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (20). இவா் தனது நண்பா்களுடன் தீபாவளி அன்று பட்டாசு வெடித்து கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் சென்ற கமல்ராஜ் (19), அவரது நண்பா்கள் 6 போ் வேகமாக சென்றனாராம். அவா்களை மெதுவாக செல்லும்படி, ராஜாவும் அவரது நண்பா்களும் கூறினராம்.

இதையடுத்து, கமல்ராஜும் அவரது நண்பா்களும் சோ்ந்து ராஜா உள்ளிட்டோரைத் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனா். இதனால் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனராம். அப்போது பைக் சேதப்பட்டதாக கூறப்படுகிறது. இரு தரப்பினா் அளித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் காவுராஜன், 12 போ் வழக்குப் பதிவு செய்தாா். இதில் பெருமாள் என்ற அனிஷ் (26), வெள்ளச்சாமி (24) மற்றும் கமல்ராஜ், ரமேஷ் (18), ராஜலட்சுமணன் (19), சுடலைமுத்து (19) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்; மற்றவா்களை தேடி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.