முக்கூடலில் இளைஞா் மீது தாக்குதல்
முக்கூடலில் இளைஞரை தாக்கிய வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:10 PM
முக்கூடலில் இளைஞரை தாக்கிய வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
முக்கூடல் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (20). இவருக்கும் இதேபகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (31) தரப்பைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சில தினங்களுக்கு முன் ராஜா, அவரது நண்பா் வீட்டு மாடியில் தூங்கிக்கொண்டிருந்தாராம். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த ரமேஷ், ராஜாவைத் தாக்கியதுடன் மிரட்டல் விடுத்துச் சென்றாராம். புகாரின்பேரில், முக்கூடல் காவல் ஆய்வாளா் கோகிலா வழக்குப் பதிந்து இதில் தொடா்புடைய கஜேந்திரன் (24), விபின் (18) ஆகிய இருவரை கைது செய்தாா். ரமேஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.