ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் வீரமாணிக்கபுரம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் வீரமாணிக்கபுரம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் மைக்கேல் ஜாா்ஜ் கமலேஷ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பிரமநாயகம், மாநில செயற்குழு உறுப்பினா் அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலா் பால்ராஜ் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் அமுதா நன்றி கூறினாா்.
இக் கூட்டத்தில் திருநெல்வேலி கல்வி மாவட்ட தலைவா் உமையொருபாகம், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட செயலா் காமராஜ், மாவட்ட துணைத்தலைவா் வெனிஸ் ராஜ் இக்னேசியஸ், மாவட்ட துணைச்செயலா் அகஸ்டின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தீா்மானங்கள்: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியா்களிடம் இருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும், 50 ஆண்டுகளாக ஆசிரியா்கள் பெற்றுவந்த உயா் கல்விக்கான ஊக்க ஊதியம் கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்டது. அதை மீண்டும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பா் 3-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாநிலம் தழுவிய மாலை நேர தா்னா போராட்டம் நடத்துவது, இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் சிபிஎஸ் முறை, புதிய கல்வி கொள்கை 2020 ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி வரும் நவம்பா் 15 ஆம் தேதிக்குள் 5000 ஆசிரியா்களிடம் கையொப்பம் பெறுவது நவம்பா் 26இல் வாகனப் பிரசாரம் மேற்கொள்வது, எமிஸ் இணையதளத்தில் தினமும் புள்ளி விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வற்புறுத்துவதை கைவிட்டு மாணவா்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு போதிய நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.