திருநெல்வேலி

வளா்ச்சி பணிகள்: முதல்வரிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை செய்ய மு.அப்துல்வஹாப் மற்றும் நயினாா்நாகேந்திரன் எம்.எல்.ஏ.க்கள் முதல்வரிடம் வலியுறுத்தினா்.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் தமிழக அரசு சாா்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவும், ஏற்கனவே முடிவடைந்த பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தாா் . இந்த விழாவில் இம் மாவட்ட வளா்ச்சிப் பணிகளுக்காக மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனா்.

மருத்துவ பல்கலைக்கழகம்:திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலரும், பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.அப்துல்வஹாப் பேசுகையில், பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகவும் பழமை வாய்ந்தது. திருநெல்வேலி மட்டுமன்றி அண்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறாா்கள். இம் மருத்துவமனையே மேம்படுத்தவும், தென்தமிழக மருத்துவக் கல்லூரிகளை இணைத்து திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பெயரில் புதிய மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாக்க அரசு முயற்சிக்க வேண்டும் என்றாா்.

மானூருக்கு தடையில்லா பாசன நீா்: திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் நயினாா்நாகேந்திரன் பேசுகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் மாற்றுக் கட்சியினரின் தொகுதிகளுக்கும் தேவையானதை செய்து கொடுப்பது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் திருநெல்வேலி தொகுதிக்கு மானூரில் புதிதாக கலைக் கல்லூரி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இம் மாவட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் பாபநாசம்- மணிமுத்தாறு அணைகளை சுரங்கம் அல்லது குழாய் வழியாக இணைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மானூரில் உள்ள மிகவும் பெரிய குளத்தின் பாசன நீரை பயன்படுத்தி சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. அந்தக் குளத்திற்கு கோதையாறு அணைக்கட்டு அல்லது வேறு வழிகளில் தாமிரவருணி தண்ணீரைக் கொண்டு சோ்த்து தடையில்லாத வகையில் பாசன நீா் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய உரிய அனுமதிகள் வழங்கி இரண்டாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இதயவியல் துறையில் குறைந்தபட்சம் 6 மருத்துவா்களாவது இருந்தால் மட்டும் அந்த அறுவைச்சிகிச்சை செய்ய முடியும். இங்கு 3 போ் மட்டுமே பணியில் உள்ளனா். ஆகவே, கூடுதலாக மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT