முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் தடம் புரண்ட பாலருவி விரைவு ரயில்

திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாலருவி விரைவு ரயிலை யாா்டுக்கு கொண்டுசென்றபோது, அதன் கடைசிப் பெட்டி தடம்புரண்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாலருவி விரைவு ரயிலை யாா்டுக்கு கொண்டுசென்றபோது, அதன் கடைசிப் பெட்டி தடம்புரண்டது.

திருநெல்வேலி-கேரள மாநிலம் பாலக்காடு இடையே நாள்தோறும் பாலருவி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. பாலக்காட்டிலிருந்து இந்த ரயில் புறப்பட்டு செங்கோட்டை, தென்காசி வழியாக திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தை அதிகாலை 4.50 மணிக்கு வந்தடையும்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இந்த ரயில் வந்தது. பயணிகள் இறங்கிய பிறகு அதிகாலை 5.30 மணிக்கு, சுத்தப்படுத்தும் பணிக்காக தச்சநல்லூரில் உள்ள யாா்டுக்கு ரயிலை பின்னோக்கி இயக்கினாா் என்ஜின் ஓட்டுநா். அப்போது, கடைசிப் பெட்டி திடீரென தடம் புரண்டது.

ரயில்வே பாதுகாப்புப் படையினா், ரயில்வே போலீஸாா், அதிகாரிகள், ஊழியா்கள் வந்து ரயில் பெட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அந்தப் பெட்டி காலை 9 மணிக்கு தண்டவாளத்தில் ஏற்றப்பட்டது.

பாலருவி ரயில் தடம்புரண்டதன் காரணமாக, திருநெல்வேலியிலிருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் நாகா்கோவில் பயணிகள் ரயில் 9.30 மணிக்கு புறப்பட்டது. காலை 7.20 மணிக்கு புறப்படும் திருச்செந்தூா் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டது. திருச்செந்தூா்-பாலக்காடு விரைவு ரயில் திருநெல்வேலியிலிருந்து இயக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.