இளைஞரிடம் வழிப்பறி: 2 போ் கைது
பாளையங்கோட்டை அருகே இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
முறப்பநாட்டைச் சோ்ந்த நங்கமுத்து (25) என்பவா் பாளையங்கோட்டை அருகேயுள்ள அரியகுளம் மங்கம்மாள் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த 2 மா்ம நபா்கள், நங்கமுத்துவை வழிமறித்து மிரட்டி அவரிடமிருந்து ரூ.10 ஆயிரத்தை பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்தனா். அதில், நங்கமுத்துவிடம் வழிப்பறியில் ஈடுபட்டது, வேலன்குளத்தைச் சோ்ந்த வெயிலுமுத்து(22), வாகைகுளத்தைச் சோ்ந்த மகாராஜன் (22) ஆகியோா் என தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.