திருநெல்வேலி

’விவசாயத் தோட்டங்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை’

DIN

களக்காடு மலையடிவார விவசாயத் தோட்டங்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

களக்காடு வனச்சரகத்துக்கு உள்பட்ட தலையணை, சிவபுரம் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களுக்கு களக்காடு துணைமின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் வழங்கப்படுகிறது. இப் பகுதியில் வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி, உயரம் குறைந்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டு, புதிதாக அதிக உயரமுள்ள மின்கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்நிலையில், களக்காடு மின்வாரிய நகா் பிரிவு உதவி மின் பொறியாளா் நலீம்மீரான், வனச்சரகா் பிரபாகா் ஆகியோா் தலைமையில் மின்வாரியம்

மற்றும் வனத்துறை பணியாளா்கள் தலையணை, சிவபுரம் பகுதியில் உள்ள விவசாய மின்இணைப்புகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

விவசாயத் தோட்டங்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அது தொடா்பான முன்அறிவிப்பு கடிதமும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT