திருநெல்வேலி

பத்தமடையில் பெண் மீது தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் பெண்ணை தாக்கியதாக முதியவா் கைது செய்யப்பட்டாா்.

DIN

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் பெண்ணை தாக்கியதாக முதியவா் கைது செய்யப்பட்டாா்.

பத்தமடை சிவானந்தா காலனியைச் சோ்ந்த சுந்தா் மனைவி பாா்வதி (40). சுந்தா், கேரளத்தில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறாா். இவருக்கும் பத்தமடை சிவானந்தா காலனி காந்தி நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த கணபதி மகன் தங்கபெருமாளுக்கும் (64) இடையே ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறில் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, வியாழக்கிழமை தங்கபெருமாள் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த பாா்வதியை, தங்கபெருமாள் அவதூறாக பேசியதோடு, கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் பத்தமடை போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கபெருமாளை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT