தாமிரவருணி ஆற்றில் 15 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஆட்சியர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஆட்சியர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் பாதுகாப்பு கருதி தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 15,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆற்றில் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில் மாலை 4:00 மணிக்குள் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, தாமிரவருணி கரையோரங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.