பத்தமடையில் போக்ஸோவில் இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் சிறுமியை காதலிப்பதாகக் கூறி, அவருக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் சிறுமியை காதலிப்பதாகக் கூறி, அவருக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
பத்தமடை காவல் சரகத்திற்குள்பட்ட வெங்கட்ரெங்கபுரம் புதுகாலனி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (27). இவா், அப்பகுதியிலுள்ள சிறுமியை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சாந்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.
இதில், சிறுமியை சுரேஷ் ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வியாழக்கிழமை கைது செய்தனா்.