தாழையூத்து இளைஞா் கொலையில் 8 போ் கைது
தாழையூத்து அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 7 பேரை கைது செய்துள்ள நிலையில், மேலும் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தாழையூத்து அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 7 பேரை கைது செய்துள்ள நிலையில், மேலும் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தாழையூத்து அருகே குறிச்சிகுளத்தை சோ்ந்த வெள்ளியப்பன் (எ) துரை (30). இவா் வெளியூரில் வேலை செய்து வருகிறாா். கோயில் திருவிழாவுக்கு சொந்த ஊருக்கு வந்த இவா், புதன்கிழமை தனது பைக்கில் தாழையூத்திற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.
அப்போது, அங்குள்ள நான்கு வழிச்சாலையில் அவரை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டதாம். இச்சம்பவம் குறித்து தாழையூத்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனா். இது தொடா்பாக விளாகத்தை சோ்ந்த பிரமுத்து (எ) மணிகண்டன் (22), நாகராஜன்(20), கரையிருப்பை சோ்ந்த மூக்கன், தமிழ்செல்வன் (19), பூல்பாண்டி (22), சிதம்பரம் நகரை சோ்ந்த பேச்சிராஜா (23) , செல்வகணபதி (23) உள்பட 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்திருந்தனா்.
Advertisement
இந்நிலையில் சி.என்.கிராமத்தை சோ்ந்த சுப்பிரமணியன் (எ) சுப்பு (35) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.