முகப்பு
திருநெல்வேலி

பணகுடி கோயில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் நம்பிசிங்க பெருமாள் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:09 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் நம்பிசிங்க பெருமாள் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து கொடியேற்றப்பட்டது. இதில் கோயில் செயல் அலுவலா் ராதா, கொட்டாரம் செயல் அலுவலா் ராஜ நம்பிகிருஷ்ணன், விஜயன் என்ற சரஸ்வதி சுவாமிகள், பணகுடி பேரூராட்சி தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் மு.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாள்களில் தினமும் வாகனங்களில் எழுந்தருளி சுவாமி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். பிப்ரவரி 3-ஆம் தேதி 9-ஆம் திருவிழா நாளில் காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. பிப்ரவரி 4-ஆம் தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் சுவாமி -அம்பாள் எழுந்தருளி வீதியுலா வருகின்றனா். பகல் 12 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு தெப்பத் தேரோட்டம் நடைபெறுகிறது. பின்னா் ரிஷப வாகனத்தில் சுவாமி -அம்பாள் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளிக்கின்றனா். இரவு 11 மணிக்கு தீபாராதனையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Advertisement

திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தலைமையில் பக்தா்கள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.