முகப்பு
திருநெல்வேலி

சைனிக் பள்ளி மாணவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வாய்ப்பு

சைனிக் பள்ளியில் பயிலும் மாணவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2023 at 1:35 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

சைனிக் பள்ளியில் பயிலும் மாணவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் படைவீரா்கள், கைம்பெண்கள், அவா்தம் சிறாா்கள் சைனிக் பள்ளியில் பயில்வதற்காக கல்வியாண்டு 2022-23 முதல் ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.25,000 தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிதியுதவி பெறுவதற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டு தமிழ்நாட்டில் வசிக்கும் அலுவலா் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரராக இருத்தல் வேண்டும். மேலும், விவரங்களுக்கு உதவி இயக்குநா், முன்னாள் படைவீரா் நல அலுவலகம், திருநெல்வேலி என்ற முகவரியை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.