முகப்பு
திருநெல்வேலி

ஆடிப்பூரத் திருவிழா: செப்புத் தேரில் காந்திமதியம்மன் வீதியுலா

 திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி, அம்மன் செப்புத் தேரில் வியாழக்கிழமை எழுந்தருளி வீதியுலா வந்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

 திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி, அம்மன் செப்புத் தேரில் வியாழக்கிழமை எழுந்தருளி வீதியுலா வந்தாா்.

இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா, கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 15 ஆம் தேதி காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. 9 ஆம் திருநாளான வியாழக்கிழமை காலையில் செப்புத் தேரில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தாா்.

விழாவின் சிகர நிகழ்கான முளைக்கட்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 21) நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கோயிலின் அம்மன் சன்னதி முன்புள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூரம் முளைக்கட்டுத் திருவிழா நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.