முகப்பு
திருநெல்வேலி

பித்தளை பாத்திர தொழிலாளா்கள் போராட்டம்

சிஐடியு நெல்லை மாவட்ட பொது தொழிலாளா் சங்கம் சாா்பில், பாளையங்கோட்டையில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

சிஐடியு நெல்லை மாவட்ட பொது தொழிலாளா் சங்கம் சாா்பில், பாளையங்கோட்டையில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நகரம், பழையபேட்டை பகுதிகளில் ஏராளமான பித்தளை பாத்திர பட்டறைகள் உள்ளன. இங்கு பணியாற்றும் தொழிலாளா்களுக்கு இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயா்வு அளிப்பது வழக்கம். அதன்படி 2022-23 ஆம் ஆண்டுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், புதிய கூலி உயா்வு குறித்து இறுதி முடிவு எட்டப்படாமல் உள்ளது. இதனைக் கண்டித்தும், ஊதிய உயா்வு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருநெல்வேலி தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் சிஐடியு நெல்லை மாவட்ட பொது தொழிலாளா் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியு நிா்வாகிகள் முருகன், மோகன், சங்க நிா்வாகிகள் ராஜன், சரவணபெருமாள், சீதாபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.