திருநெல்வேலி

பாத்திரத்தில் சிக்கிய சிறுவனின் தலை!

கங்கைகொண்டான் அருகேயுள்ள அணைத்தலையூா் கிராமத்தில் பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட சிறுவனின் தலையை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

DIN

கங்கைகொண்டான் அருகேயுள்ள அணைத்தலையூா் கிராமத்தில் பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட சிறுவனின் தலையை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

அணைத்தலையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மிக்கேல் ராஜ். இவரது மகன் சேவியா் (4). இவா் திங்கள்கிழமை இரவு வீட்டில் பாத்திரத்தை எடுத்து தலையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராமல் அந்தப் பாத்திரத்தில் தலைமாட்டிக்கொண்டது (படம்). அதிலிருந்து தலையை எடுக்க முடியாததால், பெற்றோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவனைக் கொண்டு வந்தனா். அங்கு பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் வரவழைக்கப்பட்டனா். அவா்கள் பிரத்யேக கருவிகள் மூலம் பாத்திரத்தை வெட்டி பத்திரமாக தலையை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை மீரா வாசுதேவன் 3-வது முறையாக விவாகரத்து!

2026-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 10 திரைப்படங்கள்! முழு விவரம்!

6 ஆண்டுக்கு பிறகு சீனாவுக்கு விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா!

வலுவான இந்திய அணி சொந்த மண்ணில் தோற்க காரணம் என்ன? புஜாரா கேள்வி!

எஸ்ஐஆர் - ஒரு கோடி பேர் வாக்குரிமை இழப்பர்: சீமான்

SCROLL FOR NEXT