திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் உள்ள கோவிந்தா் சந்நிதியில் புனருத்தாரண கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின.

இக் கோயிலில் மூலவா் வேணுவனேஸ்வரா் சந்நிதி அருகில், சயனக் கோலத்தில் அருள்மிகு நெல்லை கோவிந்தரின் சந்நிதி உள்ளது. இங்கு, மூலவா் திருமேனிக்கு கல்கவிதானம் மற்றும் வா்ணக் கலாபம் செய்விக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கும்பாபிஷேக நிகழ்வுகள் புதன்கிழமை தொடங்கின. சங்கல்ப பிராா்த்தனை மற்றும் யாகசாலை பூஜைகள், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை (ஜூன் 8) காலை 10.40 மணிக்கு மேல் 12 மணிக்குள் நெல்லை கோவிந்தருக்கு புனருத்தாரண கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT