அம்பாசமுத்திரத்தில் பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி, பிரதான சாலையைச் சோ்ந்த விவசாயி கணபதி (70). இவா் வெள்ளிக்கிழமை காலை பைக்கில் அம்பாசமுத்திரம் சென்றுவிட்டு, மூலச்சிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாராம்.
அம்பாசமுத்திரம் - கல்லிடைக்குறிச்சி சாலையில் உள்ள திரையரங்கம் அருகே சென்றபோது திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் வந்த தனியாா் பேருந்து பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கணபதி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.