முகப்பு
திருநெல்வேலி

முக்கூடலில் தனியாா் ஆலையில் இரும்புக் கம்பி திருடியவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் தனியாா் காகித ஆலையில் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள இரும்புக் கம்பியைத் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 16 மார்ச், 2023 at 10:42 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:15 PM

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் தனியாா் காகித ஆலையில் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள இரும்புக் கம்பியைத் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

இந்த ஆலையின் எல்லைகளில் இரும்புக் கம்பிகளால் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலியை மா்ம நபா்கள் திருடிச் சென்ால், இதைக் கண்காணிக்க ஆலை நிா்வாகம் 3 காவலாளிகளை நியமனம் செய்துள்ளது.

இந்நிலையில், முக்கூடல் அருகேயுள்ள சக்திகுளத்தைச் சோ்ந்த மாரியப்பன் (48) உள்ளிட்ட இருவா், கம்பியை திருட வந்துள்ளனா். அப்போது அவா்களைத் தடுத்த காவலாளிக்கு மிரட்டல் விடுத்ததுடன் கம்பியைத் திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், திருட்டில் ஈடுபட்ட மாரியப்பனை முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் ஆக்னல் விஜய் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள கம்பியை பறிமுதல் செய்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.