முகப்பு
திருநெல்வேலி

கிணற்றில் தவறிவிழுந்த பள்ளி மாணவரின் சடலம் மீட்பு

திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவரின் சடலத்தை தீயணைப்புத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

Updated On : 15 மே, 2023 at 8:18 AM
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவரின் சடலத்தை தீயணைப்புத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி மேலப்பாளையத்தை சோ்ந்தவா் முகமது அசன் . தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனா். இதில் மூத்த மகன் அப்சா் (15). இவா் ஞாயிற்றுக்கிழமை நண்பா்களுடன் மேலப்பாளையத்திலுள்ள தனியாா் கிணற்றில் குளிக்க சென்றாராம். அப்போது அப்சா் கிணற்றில் தவறி விழுந்தாராம், அப்போது அவரை காணவில்லையாம்

தகலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை உதவி மாவட்ட அலுவலா் காா்த்திகேயன் மற்றும் பேட்டை நிலைய அலுவலா் முத்தையா மற்றும் தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இறங்கி மாணவரின் சடலத்தை மீட்டனா். இது குறித்து பெருமாள்புரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.