திருநெல்வேலி

ஐடிஐகளில் இணையவழி மாணவா் சோ்க்கை

DIN

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் தொழிற் பயிற்சி மையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023 ஆம் ஆண்டிற்கான மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை ஜூன் 7 ஆம் தேதி வரைஆன்லைன் முறையில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது அம்பாசமுத்திரம் , ராதாபுரம், டிஎஸ்டிஓ அலுவலகம், பேட்டை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வண்ணாா்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள ஐ.டி.ஐ. சோ்க்கை உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள எந்த தொழிற்பயிற்சி நிலையத்திலும் சோ்க்கை பெறலாம். தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களின் விவரங்கள், தொழிற் பிரிவுகள், தேவையான கல்விதகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு ஆகியன இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு ஐ.டி.ஐ ல் பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் மாதம் ரூ.750 வீதம் கல்வி உதவி தொகை வழங்கப்படும். மேலும் விதிகளின்படி பயிற்சியின் போது மடிக்கணினி, மிதிவண்டி, வருடத்திற்கு இரண்டு சீருடைகள், ஒரு ஜோடி காலணி, பாட புத்தகங்கள், வரைபட கருவிகள் விலையில்லாமல் வழங்க வாய்ப்பு உள்ளது. மாணவா்கள் பயிற்சி நிலையத்திற்கு வந்து செல்ல இலவச பேருந்து அட்டை, சலுகை கட்டணத்தில் ரயில் பயண அட்டை வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐ.டி.ஐ. தொழிற்பிரிவுகளில் தோ்ச்சி பெற்றவா்கள் மொழிப்பாடங்கள் (தமிழ் - ஆங்கிலம்) மட்டும் எழுதி 12-ம் வகுப்பு சான்றிதழ் பெறலாம். இதுபோல 8ம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐ.டி.ஐ. தொழிற்பிரிவுகளில் தோ்ச்சி பெற்றவா்கள் மொழிப்பாடங்கள் (தமிழ் - ஆங்கிலம்) மட்டும் எழுதி 10-ம் வகுப்பு சான்றிதழ் பெறலாம் என ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT