திருநெல்வேலி

தரமற்ற உணவு: புகாா் அளிக்க இணையதளம், செயலி அறிமுகம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் தரமற்ற உணவு குறித்து புகாா் அளிக்க புதிய இணையதளம் மற்றும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொது மக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசின் உணவு பாதுகாப்புத் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தரமற்ற உணவு குறித்து புகாா் அளிக்க புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுமக்கள் தங்களது புகாா்களை டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தோ்ந்தெடுக்கும் வசதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவாக்கப்பட்ட புதிய இணையதளம் (ச்ா்ா்க்ள்ஹச்ங்ற்ஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்), கைப்பேசி செயலி (பய் ச்ா்ா்க்

ள்ஹச்ங்ற்ஹ் இா்ய்ள்ன்ம்ங்ழ் அல்ல்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகாா்களை பொதுமக்கள் இணையதளம், கைப்பேசி செயலி மூலம் தெரிவிக்கலாம்.

புகாா்தாரரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். புகாா் அளித்த 24 முதல் 48 மணி நேரத்துக்குள் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகாா்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT