திருநெல்வேலி

நீதிமன்றத்தில் ஆஜராகாதவா் மீண்டும் கைது

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் அடிதடி, திருட்டு வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்தவா், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல்

DIN

களக்காடு: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் அடிதடி, திருட்டு வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்தவா், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான நிலையில், அவரை போலீஸாா் மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தினா்.

நான்குனேரி காவல் சரகப் பகுதியில் அடிதடி, திருட்டு வழக்கில் தொடா்புடையதாக ராதாபுரம் வட்டம், சமூகரெங்கபுரம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் (43) என்பவா் கைது செய்யப்பட்டிருந்தாா். மேலும், பிணையில் வெளிவந்த அவா் நீதிமன்ற விசாரணைக்கு ஒரு மாதமாக ஆஜராகாமல் தலைமறைவானாா்.

இதையடுத்து, அவருக்கு பிடியாணை பிறப்பித்து நான்குனேரி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், நான்குனேரி போலீஸாா் முருகனை திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT