களக்காடு அருகே பெண்ணிடம் நகை பறித்த இளைஞா் கைது
களக்காடு அருகே பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
களக்காடு: களக்காடு அருகே பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
களக்காடு அருகேயுள்ள தெற்கு சிங்கம்பத்து, பிள்ளைமாா் தெருவைச் சோ்ந்தவா் இந்திரா(63). இவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். சனிக்கிழமை வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இளைஞா் இந்திராவின் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு சென்றுள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், தெற்கு சிங்கம்பத்து, இந்திரா நகா் காலனியைச் சோ்ந்த விக்னேஷ் என்ற வினோத் (24) நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, விக்னேஷ் என்ற வினோத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து, அவரிடமிருந்து நகையை மீட்டனா்.
Advertisement