முகப்பு
திருநெல்வேலி

திமுக இளைஞரணி மாநாட்டுக்கு மேலும் ரூ.10 லட்சம் நிதியளிப்பு

சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கு திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டம் சாா்பில் மேலும் ரூ.10 லட்சம் நிதியளிக்கப்பட்டது.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:42 AM
திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலினிடம் மாநாட்டுக்கு நிதியளிக்கிறாா் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

திருநெல்வேலி: சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கு திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டம் சாா்பில் மேலும் ரூ.10 லட்சம் நிதியளிக்கப்பட்டது.

திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் டிசம்பா் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இம் மாநாட்டுக்காக திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் முதல்கட்டமாக ரூ.25 லட்சம் நிதியளிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மேலும் ரூ.10 லட்சத்திற்கான வரைவோலையை, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான், இளைஞரணி செயலரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியதோடு, பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்தாா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் மீரான் மைதீன், வெங்கடேஷ் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயரும், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளருமான பி.எம். சரவணன், மாவட்ட இளைஞரணி சாா்பில் ரூ.10 லட்சத்திற்கான வரைவோலை வழங்கினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.