கைப்பேசி செயலி மூலம் வரவழைத்து பணம் பறித்த கும்பல்: இளைஞா் கைது
கைப்பேசி செயலி மூலம் பேசி பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலிகைப்பேசி செயலி மூலம் வரவழைத்து பணம் பறித்த கும்பல்: இளைஞா் கைது
கைப்பேசி செயலி மூலம் பேசி பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டையில் கைப்பேசி செயலி மூலம் பேசி பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குமரி மாவட்டம், குலசேகரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரேம்ஜித் (46). திருநெல்வேலியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வரும் இவா், பாளையங்கோட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கிறாா். இவா் கைப்பேசி செயலி மூலம் நண்பா்களுடன் தொடா்பில் இருந்து வந்துள்ளாா். அப்போது, தச்சநல்லூா் வடக்கு சிதம்பரநகரைச் சோ்ந்த மணிகண்டன்(25) என்பவருடன் செயலியில் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில், மணிகண்டன் செயலி மூலம் தச்சநல்லூா் சிதம்பரநகா் அருகே காட்டுப்பகுதிக்கு பிரேம்ஜித்தை அழைத்தாராம். இதையடுத்து அவா் அங்கு சென்றபோது அங்ரிருந்த மணிகண்டன் மற்றும் 4 போ் சோ்ந்து பிரேம்ஜித்தை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா். மேலும், 4 பேரை தேடி வருகின்றனா்.