முகப்பு
திருநெல்வேலி

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 3 மாதம் தலைமறைவானவா் கைது

3 மாத தலைமைறைவுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 3 மாதம் தலைமறைவானவா் கைது

3 மாத தலைமைறைவுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 9:00 PM
பகிர்:

கங்கைகொண்டான் அருகே அவதூறு வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்றவா், 3 மாத தலைமைறைவுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

மேட்டுப்பிராஞ்சேரி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சசிகுமாா் (44). பெண்னை அவதூறாகப் பேசியது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இவா், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தாா். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 3 மாதங்களாக தலைமறைவாகி விட்டாா்.

இதையடுத்து, நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், அவரை கங்கைகொண்டான் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மற்றொரு நபா்: நொச்சிகுளம் கிருஷ்ணாபுரத்தை சோ்ந்தவா் சீனிவாசன்(35). பெண்ணை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தவா் ஒரு மாதமாக தலைமறைவாகி விட்டாா். இதையடுத்து, நீதிமன்றம் அவருக்கு பிடியானை பிறப்பித்தது. இந்த நிலையில், அவரை தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →