ஆா்எஸ்எஸ் மீதான அவதூறு வழக்கு: தாணே நீதிமன்றத்தில் ராகுல் ஆஜா்!
அவதூறு வழக்கில் தனது ஜாமீனுக்கான புதிய உத்தரவாதத்தைச் சமப்ப்பிப்பதற்காக ராகுல் காந்தி, பிவண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நேரில் ஆஜரானது தொடர்பாக...
தாணே: ஆா்எஸ்எஸ் அமைப்பு குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக ஆர்எஸ்எஸ் ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் தனது ஜாமீனுக்கான புதிய உத்தரவாதத்தைச் சமப்ப்பிப்பதற்காக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மகாராஷ்டிர மாநிலம் புணே மாவட்டம் பிவண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நேரில் ஆஜரானாா்.
இந்த வழக்கில் ராகுலுக்கு ஜாமீன் உத்தராவதம் அளித்திருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் கடந்த ஆண்டு டிசம்பரில் காலமானதால், இந்த வழக்கில் ராகுல் காந்தி ஒரு புதிய ஜாமீன்தாரருடன் தொடர்புடைய நடைமுறைகளை முடிப்பதற்கு ராகுல் நேரில் ஆஜராக வேண்டும் என்று பிவாண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கோரியிருந்த நிலையில், ராகுல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன்படி, பிவண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நேரில் ஆஜரான ராகுல், தன்னுடன் அழைத்து வந்திருந்த அம்மாநில காங்கிரஸ் தலைவா் ஹா்ஷ்வா்தன் சப்கலை தனக்கான புதிய உத்தரவாதம் அளிப்பவராகக் குற்ப்பிட்டு, ஜாமீனுக்கான புதிய பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்தாா். இந்க நடைமுறைகள் அரை மணி நேரத்தில் முடிந்ததை அடுத்து நீதிமன்ற வளாகத்திலிருந்து ராகுல் புறப்பட்டுச் சென்றாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து ராகுல் காந்திக்கு நிரந்தர விலக்கு அளிக்கப்ட்டுள்ளதால் இனி நேரில் ஆஜராகத் தேவையில்லை. இந்த வழக்கில் உரிய நேரத்தில் எங்கள் தரப்பு சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமா்ப்பிப்போம் என்று ராகுல் வழக்குரைஞா் நாராயண் ஐயா் தெரிவித்தார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டம் பிவாண்டியில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‘மகாத்மா காந்தி கொல்லப்பட்டதன் பின்னணியில் ஆா்எஸ்எஸ் இருந்தது’ என்று கூறியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
அவரின் பேச்சு ஆா்எஸ்எஸின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகத் தெரிவித்து, பிவாண்டியில் உள்ள நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில், ராகுல் மீது ராஜேஷ் குண்டே என்ற ஆா்எஸ்எஸ் தொண்டா் அவதூறு வழக்குத் தொடுத்தாா்.
ராகுல் பிவண்டிக்கு சனிக்கிழமை வந்தபோது, பாஜகவினா் அவருக்கு கருப்புக் கொடி காண்பித்து கண்டனம் தெரிவித்தனா்.
Congress leader Rahul Gandhi on Saturday reached a magistrate's court in Maharashtra's Thane district to furnish a new surety in the defamation case filed against him by an RSS activist.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.