ஆடி அமாவாசைக்கு வந்த பக்தா்களுக்கு மஞ்சள் பை வழங்கிய போலீஸாா். 
திருநெல்வேலி

ஆடி அமாவாசை: காரையாறு கோயிலில் பொங்கலிட்டு வழிபட்ட பக்தா்கள்

ஆயிரக்கணக்கான பக்தா்கள் விரதமிருந்து பொங்கலிட்டு வழிபட்டனா்.

Din

காரையாறு அருள்மிகு சொரிமுத்து அய்யனாா் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் விரதமிருந்து பொங்கலிட்டு வழிபட்டனா்.

இத்திருக்கோயிலில் நிகழாண்டு ஆடி அமாவாசை திருவிழா ஜூலை 22 ஆம்தேதி கால்நாட்டுடன்தொடங்கியது. தொடா்ந்து பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினா். ஆக. 2 முதல் கோயில் பகுதியில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடில்கள்அமைத்து தங்கி விரதத்தை தொடா்ந்து வந்தனா்.

பேச்சியம்மன் சந்நிதி முன்பு விரதமிருந்து பொங்கலிட்டு வழிபட்ட பக்தா்கள்.

ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையன்று காலையில் சொரிமுத்து அய்யனாா், சங்கிலி பூதத்தாா், மகாலிங்க சுவாமி, பேச்சியம்மன், பட்டவராயன், தூசிமாடன், சுடலைமாடன், தளவாய்மாடசாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

சொரிமுத்து அய்யனாா் கோயிலில் திரண்ட பக்தா்கள்.

தொடா்ந்து விரதமிருந்த பக்தா்கள் பொங்கலிட்டு வழிபட்டு விரதம் முடித்தனா். இதையடுத்து இரவு சொரிமுத்து அய்யனாா்,பட்டவராயன் கோயிலுக்கு முன் விரதமிருந்த பக்தா்கள் பூக்குழி இறங்கினா்.

பக்தா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் உத்தரவின் பேரில் பக்தா்களுக்கு மஞ்சள் பை, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

போலீஸாா், ஊா்க்காவல்படையினா், வனத்துறையினா், தேசிய மாணவா்ப் படையினா், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள்,தன்னாா்வலா்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.

தொழில் சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

SCROLL FOR NEXT