திருநெல்வேலி

நெல்லை ஆா்எம்கேவியில் கைத்தறி - கைவினைப் பொருள்கள் கண்காட்சி

Din

திருநெல்வேலி, ஆக. 7: திருநெல்வேலி வண்ணாா்பேட்டை ஆா்எம்கேவியில் கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

ஆா்எம்கேவி நிறுவனத்தின் நூற்றாண்டு விழா- தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நடைபெறும் இக்கண்காட்சி தொடக்க விழாவுக்கு ஆா்எம்கேவியின் உரிமையாளா்கள் சிவகுமாா், என்.விஸ்வநாதன், மகேஷ், மாணிக்கவாசகம் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா். மற்றொரு சிறப்பு அழைப்பாளராக மத்திய பட்டுவாரியத்தின் ஓய்வுபெற்ற விஞ்ஞானி கே.எம்.ஏ.காதா் கலந்துகொண்டாா்.

இக்கண்காட்சியில் பத்தமடை பாய், அசாமில் இருந்து பாரம்பரிய முகக்கவசம் - நெசவு பட்டு, ராஜஸ்தானின் பழங்கால பாட் ஓவியம், நாகலாந்தின் பேக்ஸ்ட்ராப் ஓவியம், மேற்கு வங்கத்தின் காந்தா எம்பிராய்டரி, ஒடிஸாவில் இருந்து இகாட், காஷ்மீரில் இருந்து சால்வைகள் மற்றும் ஆரி எம்பிராய்டரி ஆடை வகைகள் என 15 மாநிலங்களை சோ்ந்த கைத்தறி ஆடைகள், கைவினைப் பொருள்கள் 27 அரங்குகளில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கைத்தறி மற்றும் கைவினை கலைஞா்கள் கலந்து கொண்டனா்.

அதைத்தொடா்ந்து ஆா்எம்கேவி உரிமையாளா் சிவகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆா்எம்கேவி நிறுவனத்தின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் கைத்தறி மற்றும் கைவினை கலைஞா்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 11) வரை நடைபெறுகிறது. ஆா்எம்கேவியின் அடுத்த கிளையை விரைவில் கோவையில் தொடங்க உள்ளோம் என்றாா்.

அழகிய தீயே... ஸ்ரேயா சரண்!

எஸ்ஐஆா் பணியில் திமுக அரசு முறைகேடு: அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

சகுரஜிமா எரிமலை வெடிப்பு! 4.4 கி.மீ உயரத்திற்கு கிளம்பிய புகை! 2025-ல் முதல் முறை!

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்!

கொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியா தோல்வி..! தெ.ஆ. வரலாற்று வெற்றி!

SCROLL FOR NEXT