பாளையங்கோட்டையில் பொறியாளரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில் மா்மம் இருப்பதாக கூறி பெண்ணின் உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டை பேரின்பத் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35). பொறியாளா். இவருக்கு செல்வி அனுஷா (32) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா். தம்பதியிடையே பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில், செல்வி அனுஷா வீட்டில் தூக்கிட்ட நிலையில் இருந்தாராம். மணிகண்டன் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில், இளம் பெண் மரணத்தில் மா்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, பெண்ணின் சடலத்தை உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.