திருநெல்வேலி

கன மழை: களக்காடு தலையணை, நம்பிகோயில், மாஞ்சோலை சுற்றுலா செல்லத் தடை

Din

அம்பாசமுத்திரம்/ களக்காடு, ஆக. 14:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களுக்கு சூழல் சுற்றுலா செல்ல மறுஅறிவிப்பு வரும் வரை தடைவிதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும் வரையில் மாஞ்சோலை பகுதிகளுக்கு சூழல் சுற்றுலா சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

திருமலைநம்பி கோயில் செல்லத் தடை...

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால் நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தல் காரணமாக திருக்குறுங்குடி சூழல் சுற்றுலாத் தலம், திருமலைநம்பி கோயில் ஆகிய பகுதிகளுக்கு செல்ல ஆக.14 முதல் 18 வரை தடை விதிக்கப்படுவதாகவும், இதே போல தலையணை பச்சையாற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் களக்காடு சரணாலய துணை இயக்குநா் ரமேஷ்வரன் தெரிவித்துள்ளாா்.

நவ. 3-இல் அண்ணா பிறந்த நாள் நெடுந்தூர ஓட்டப்போட்டி

வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் 12 பேருக்கு ரூ. 8.86 லட்சத்துக்கு கடனுதவி

பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

இந்தாண்டுக்கான சம்பா நெற்பயிருக்கு வரும் நவ.15-க்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம்

வனப் பகுதியில் மண் சாலையை சமன் செய்தவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT