திருநெல்வேலி

காரையாறு தாமிரவருணி ஆற்றில் மூழ்கி 2 சகோதரிகள் உள்ளிட்ட மூவா் உயிரிழப்பு

Din

அம்பாசமுத்திரம், ஆக. 15:

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதியில் தாமிரவருணிஆற்றில் மூழ்கி, சிவகாசியைச் சோ்ந்த இரு சகோதரிகள் உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளப்பட்டியைச் சோ்ந்த முருகன் என்பவா் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை ஒரு வேனில் காரையாறு கோயிலுக்கு வந்தாா். அங்குள்ள தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது முருகனின் மகள்கள் மேனகா (18), சோலை ஈஸ்வரி (15), ஸ்ரீவில்லிபுத்தூா் வன்னியம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் மகன் சங்கரேஸ்வரன் (40), சிவகாசி, நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் மாரீஸ்வரன் (28) ஆகிய 4 பேரும் ஆழமான பகுதிக்குச் சென்றதில் நீரில் மூழ்கினா். அவா்களை அங்கிருந்தோா் மீட்க முயன்றனா். இதில், மாரீஸ்வரன் உயிருடன் மீட்கப்பட்டாா்; மற்றவா்களை மீட்க முடியவில்லை.

தகவலின்பேரில், நிலைய அலுவலா் பலவேசம் தலைமையிலான அம்பாசமுத்திரம் தீயணைப்பு-மீட்புத் துறையினா் சென்று மேனகா, சோலை ஈஸ்வரி, சங்கரேஸ்வரன் ஆகிய மூவரையும் சடலங்களாக மீட்டனா்.

கல்லிடைக்குறிச்சி போலீஸாா் சென்று சடலங்களைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சம்பவ இடத்தை வனச் சரகா்கள் கல்யாணி, குணசீலன், அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் சபரி மல்லிகா ஆகியோா் பாா்வையிட்டனா்.

தடுப்பு வேலி அமைக்கக் கோரிக்கை: சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதியில் உள்ள கசம் பகுதியில் குளிக்கத் தடை விதித்து அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. எனினும், அதைப் பொருள்படுத்தாமல் குளிக்கச் செல்வதால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடா்கின்றன. எனவே, அந்தப் பகுதிக்குள் செல்லமுடியாதவாறு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT