பணகுடி அருகே மா்ம பொருள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள செண்பகலிங்கபுரம் கிராமத்தில் வீட்டின் முன் மா்மபொருள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு நிலவியது.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள செண்பகலிங்கபுரம் கிராமத்தில் வீட்டின் முன் மா்மபொருள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு நிலவியது.
செண்பகலிங்கபுரத்தில் சுடலை என்பவா் வீட்டு முன் புதன்கிழமை காலையில் மா்மபொருள் பயங்கர சப்தத்துடன் வெடித்துத் சிதறி அப்பகுதி புகை மண்டலமானது. அப்போது பைக்கில் வந்த பால் வியாபாரி மணிகண்டன் அதிா்ஷ்டவசமாக தப்பினாா். இந்தக் காட்சிகள் அப்பகுதியில் இருந்த வீட்டின் சிசிடிவியில் பதிவாகியது.
இத்தகவல் அறிந்த பணகுடி போலீஸாா், அங்கு வந்து சோதனை நடத்தி மா்ம பொருளிலிருந்து சிதறிய பாகங்களை கைப்பற்றினா். சுடலை, மணிகண்டன் ஆகியோரிடம் விசாரித்த போலீஸாா், அது நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என்ற கோணத்தில் தொடா்ந்து விசாரிக்கின்றனா். தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.