தில்லி: நடந்து சென்றவர் மீது மோதிய அரசுப் பேருந்துக்குத் தீவைப்பு
தில்லியில் நடந்து சென்றவர் மீது மோதிய அரசுப் பேருந்துக்குத் தீவைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தில்லியில் நடந்து சென்றவர் மீது மோதிய அரசுப் பேருந்துக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தலைநகர் தில்லியின் நங்லோய் பகுதியில் நடந்து சென்றவர் மீது அரசுப் பேருந்து மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்தப் பேருந்தை அடித்து நொறுக்கி தீ வைத்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அங்கு திரண்ட பொதுமக்கள் பேருந்து மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதுடன், அருகில் இருந்த சில வாகனங்களின் ஜன்னல்களையும் சேதப்படுத்தினர். காலை 10 மணியளவில் அரசுப் பேருந்து தீப்பற்றி எரிவதாக எங்களுக்கு அழைப்பு வந்தது என்று தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
Advertisement
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. மேலும் சில வாகனங்களின் ஜன்னல்களும் சேதமடைந்திருந்தன. காலை 11 மணிக்குள் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.