முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள்

ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருளால் பரபரப்பு நிலவியது.

Updated On : 23 மார்ச் 2026, 11:18 am IST
- File photo | PTI
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருளால் பரபரப்பு நிலவியது.

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திங்கள்கிழமை மர்மமான வெடிப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கக்வால் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள கவாலா தலாப்பில், முன்னாள் சர்பஞ்ச் ஜெய் ராம் சர்மாவின் இல்லத்தின் பிரதான வாயிலுக்கு அருகே அதிகாலை 2 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

Advertisement

இந்த வெடிப்பினால் வாயிலும் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியும் பெயர்ந்து விழுந்ததாகவும், ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் மேலும் கூறினர்.

வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய, தடயவியல் நிபுணர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்குச் சென்று மாதிரிகளை எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாகவும், மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

summary

The blast took place near the main gate of the residence of former sarpanch Jai Ram Sharma at Gawala Talab, some 10 km from the International Border in the Ghagwal sector around 2 am.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.