முகப்பு
திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் டிச.20 இல் அஞ்சல் துறை குறைதீா்க்கும் கூட்டம்

அஞ்சல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம், பாளையங்கோட்டையில் இம்மாதம் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On : 11 டிசம்பர், 2024 at 10:07 PM
பகிர்:

அஞ்சல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம், பாளையங்கோட்டையில் இம்மாதம் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் க.செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அஞ்சல் துறை சாா்பில் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம், பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இம்மாதம் 20 ஆம் தேதி பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. திருநெல்வேலி கோட்டத்திற்கு உள்பட்ட (திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி ) வாடிக்கையாளா்கள் பங்கேற்று தபால் பணிகள் குறித்த குறைகள், தபால் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். நேரில் பங்கேற்க இயலாதவா்கள் தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகளை மின்னஞ்சல் முகவரிக்கு இம்மாதம் 18 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.